FoundationActivities

* ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு (ம) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் நம் இன மாணக்கர்களை ஊக்குவித்து பாராட்டி பரிசிகளும், ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவருகிறது.

* 10ம் வகுப்பு (ம) 12-ம் வகுப்பு முடித்து வருமையின் காரணமாக மேற்படிப்பை தொடரமுடியாத நமது இன மாணவர்களை கண்டறிந்து கல்விக்காக செலவுகளை அறக்கட்டளையே ஏற்று அவர்கள் மேற்படிப்பு தொடர முடிந்தவரை உதவிகள் செய்யப்படுகிறது.

* யாதவ இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனிமனித மேம்பாட்டு பயிற்சி, சுய தொழில் வழிகாட்டு பயிற்சி, வாழ்வியல்திறன் பயிற்சி ஆகியவை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

* 10ம் வகுப்பு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 யாதவ இளைஞர்களுக்கு தமிழகத்தில் மிகச்சிறந்த கம்பெனிகளில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. தொடர்ந்து இம்முயற்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது.

* வறுமையில் உள்ள நமது இனைத்தைச் சார்ந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கியும், திருமணத்தை நடத்தி வைத்தும் உள்ளோம். தொடர்ந்து இம்முயற்ச்சி மேற் கொள்ளப் படுகின்றது.

* மேற்படிப்பு செல்கின்ற நமது இன மாணாக்கர்களுக்கு நமது இனத்தினர் நடத்திடும் உயர்கல்வி நிறுவனங்களில் நன்கொடை இல்லாமல் மேற்படிப்பு படித்திட இடம் பெற்று தந்து தொடர்ந்து அதனை செய்து கொண்டுள்ளோம்.

* பகவத்கீதையின் சாராம்சம், கீதை சொல்லும் வாழ்கை நெறிகள் ஆகியவற்றை அச்சிட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

* நமது சமுதாய பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை நமது இளைஞர்கள் அறியும் பொருட்டு அறக்கட்டளை அலுவலகத்தில் நல்ல நூலகம் அமைத்து பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.

* நமது சமுதாய வரலாற்றை வெளிக்கொண்டு வரும் பொருட்டு நூல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன.

* வெளியூர்களில் இருந்து வரும் நம் இனத்தினர்களுக்கு மருத்துவமனைகளில் அவசரகாலங்களில் அவர்களுக்கு இரத்த தானம் செய்து உதவி வருகிறது..

Page 1 of 2 1 2 »

Image Gallery

Services Overview

ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு (ம) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் நம் இன மாணக்கர்களை ஊக்குவித்து பாராட்டி பரிசிகளும், ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வரப்படுகிறது..

Contact Us

அறக்கட்டளைக்கு வளர்ச்சி நிதி வழங்க விரும்புபவர்கள் THANJAVUR YADAVA CEC TRUST என்ற பெயருக்கு அனுப்பி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Address:1300,காந்திஜி நகர் - நாஞ்சிக்கோட்டை சாலை ,தஞ்சாவூர்
Telephone:99424 56193
fax:
E-mail: sayadav63@gmail.com