Yadava History

தேவகிரியை ஆண்ட யாதவ மன்னர்கள் (கி.பி. 12-14 ஆம் நூற்றாண்டுகள்).

தேவகிரியை ஆட்சி செய்த யாதவகள் மகாபாரத நாயகனான கிருஷ்ண பகவானின் வழிவந்தவர்கள். இவர்கள் நாசிக் முதல் தேவகிரி (இன்றைய தௌலதாபாத்) வரையில் அமைந்திருந்த செவுனா பகுதியை ஆட்சி செய்ததால் யாதவர்கள் செவுனர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களின் மன்னோர்கள் இராட்டிரகூடர்கள் என்கின்ற பேரரசர்களிடமும் பிற்கால மேலைச் சாளுக்கிய பேரரசர்களிடமும் குறு நில மன்னர்களாக இருந்தார்கள். ஐந்தாம் பில்லம்மா (கி.பி.1175/1190). கல்யாணியை ஆண்ட மேலைச் சாளுக்கியர்களின் வீழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு அவ்வழி வந்த அரசர் சோமேசுவரனைத் ஐந்தாம் பில்லம்மா என்கின்ற யாதவ மன்ன்ன் போரிட்டு தோற்கடித்து தம்மை அப்பகுதியின் சுதந்திர அரசாக அறிவித்துக்கொண்டார். ஹொய்சள அரசர் இரண்டாம் வீரபல்லாளனுடன் போரிட்டு லக்கண்டி போர்களத்தில் அய்தாம்பில்லம்மா இறந்தார். இதன் பிறகு அய்தாம் பில்லம்மா மகன் ஜெய்திரபாலா ஆட்சிக்கு வந்தார். இவர் 1191 முதல் 1210 வரை காகதீயர்கள், காளச்சூரிகள் மற்றும் கூஜர்கள் ஆகிய மன்னர்களை தோற்கடித்து தனது அதிகாரத்தை மேலும் விரிவு படுத்தியுள்ளார், இவர் காகதீய அரசர் மகாதேவனை வென்றார், ஹொய்சாள மன்ன்ன் இரண்டாம் வீரபல்லாளனை தோற்கடித்து கிருஷ்ணா நதியையும் கடந்து தனது எல்லையை விரிவு படுத்தினார். குஜராத் மீது பல முறை படையெடுத்து வென்றுள்ளார். சில்ஹாரா மரபின் கீழ் இருந்த கொல்லாபூரை வெற்று தம் நாட்டுடன் இணைத்துக்கொண்டார். இதன்பிறகு இவரது மகன் இராமச்சந்திரதேவர் கி.பி.1271ல் ஆட்சிக்கு வந்தவர் இவரே தேவகிரி யாதவ அரசர்களில் கடைசி மன்ன்ன் ஆவார். இவ அலாவுதீன் கில்ஜி தோற்கடித்து டெல்லிக்கு வரி(திறை) செலுத்தும் அரசாக மாற்றினார். இவரை அடுத்து இவரை அடுத்து இராமச்சந்திர தேவர் மகன் சங்கர தேவர் 1390ல் அரசர் ஆனார் இவர் டெல்லி சுல்தானுக்கு திறை செலுத்த மறுத்த்தால் மாலிக்கபூர் என்ற மகலாயரால் 1312ல் போரிட்டு சங்கர தேவனை கொன்றான். யாதவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளார்கள் என்பது இவ்வரலாறு மூலம் உறுதி செய்யப்படுகிறது. (புகழ்மிக்க தேவகிரி கோட்டை யாதவர்களால் கட்டப்பட்டது வலிமை வாய்ந்த இந்தியக் கோட்டைகளில் தேவகிரி கோட்டையும் ஒன்று இன்று வரை இக்கோட்டை உறுதியுடன் உள்ளது. மேலும் யாதவர்கள் அறிவியலையும், வானவியலையும் ஆதரித்து வளர்த்து வந்துள்ளனர்.)

யாதவர்கள் வரலாறு:

தமிழ்நாட்டின் மிகப் பழமை வாய்ந்த சமூகங்களுள் ஒன்று யாதவர் சமூகம். இவர்கள் இடையர்கள். ஆயர்கள். கோனார் என்றே தமிழ்நாட்டில் அழைக்கப்படுகின்றனர். வட இந்தியாவில் யாதவ் என்று அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின் யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கலந்து விற்பதுமே இவர்கள் இருவரின் தொழிலாகவும் இன்றும் இருக்கிறது. தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி. ‘இடை’ (நடு) என்றத் தமிழ்ச் சொல்லில் இருந்து ‘இடையர்’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் ‘முல்லை’ என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக் காட்டுகிறது. “விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்குன் இடையே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது” என பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த இடையர்கள்தான் தங்கள் பெயர்களுடன் பிற்காலத்தில் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்து கொண்டுள்ளனர். 1891-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் ‘பிள்ளை, கரையாளர்’ என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களில் அநேகர் வைணவ வழியைப் பின்பற்றுகின்றனர்.

இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என சொல்லப்படுகிறது. அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு. தமிழகத்தில் பதிப்புத் துறை பெரிதும் வளர்ச்சியடையாத காலத்திலேயே மதுரையில் பதிப்புத் துறையில் ஈடுபட்ட இ.மா. கோபாலகிருஷ்ணக் கோனார், பொன்னையக் கோனார் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். தமிழன்னை ஈன்ற தனிப்பெருந்தமிழறிஞர் கார்மேகக் கோனார் நல்லிசைப் புலவர்கள், கண்ணகி தேவி, ஆபுத்திரன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டவர். பள்ளி, கல்லூரிகளில் தமிழையும் தமிழாசிரியர்களையும் துச்சமாக மதித்து வந்தவர்கள் மத்தியில் தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய மரியாதையை வாங்கிக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நூல்களை வெளியிட்டு சிறப்பு செய்தவர். மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்க்கவும் நூல்களை மலிவுவிலையில் கிடைக்கவும் செய்தவர். கோனார் நோட்ஸ் வெளியிட்டு தமிழகம் முழுதும் கல்வியில் புதுவடிவத்தையும் எளிமையையும் ஏற்படுத்தியவர் இவரே. பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு அரசியல் ஞானியை ஈன்று உதவியதும் இந்த சமூகம்தான். வரலாறு எழுதுவது என்பது வேறு. வரலாறாக வாழ்வது என்பது வேறு. இந்த இரண்டையுமே செய்தவர்தான் புதுச்சேரியை சேர்ந்த நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர் (அதாவது டோண்டு ராகவனது சக ஃபிரெஞ்சு-தமிழ் துபாஷி). அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு முழுமையான தமிழக வரலாறு நமக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கும். சென்னை-பெரம்பூரில் பிறந்த ஆனந்தரங்கர், ஒரு சாதாரண பாக்குக் கிடங்கு ஒன்றின் உரிமையாளராகத்தான் தன் வாழ்க்கையைத் துவங்கினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளேயின் மொழி பெயர்ப்பாளராகி (துபாஷி) அரசியல் உலகில் முதன்மையும் முன்னுரிமையையும் பெற்றார். இந்தக் காலத்தில் அவர் எழுதிய நாட்குறிப்புகள்தான் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. ஆனந்த ரங்கராட் சந்தமு, ஆனந்தரங்கக் கோவை, ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ் என்று இவர் குறித்துப் பல இலக்கியங்கள் உருவாகும் அளவுக்கு அவர் வரலாற்று நாயகராக விளங்கியவர். அந்தப் பெருமை யாதவர்குல சமூகத்துக்கே. யாதவ சமூகத்தார் இந்திய சுதந்திரத்துக்கு ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது.

மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில் சென்னை மக்களுக்கு பல வழிகளில் உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றி அதில் வெற்றியும் கண்டது. இவரது காலத்தைத்தான் ‘மாநகராட்சியின் பொற்காலம்’ என போற்றுகிறார்கள். ‘தமிழர் வீரம்’’தமிழ் வளர்த்த கோயில்கள்’, ‘போர்க்காவியம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகுக்கு அணி சேர்த்தவர் மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை. யாதவர்கள் வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருஷ்ண பகவானைப் பல்வேறு பெயர்களால் வழிபடுகின்றனர். அவர்கள் சனிக் கிழமையைப் புனித நாளாகக் கருதுகின்றனர். ‘கோகுலாஷ்டமி’தான் அவர்களுக்கு மிக முக்கியமான திருநாள். அதற்கு மறுநாள் நடக்கும் உறியடி உதசவத்தின்போதுகிருஷ்ணரின் குழந்தைப்பருவ லீலைகளாகிய வெண்ணெய் திருடுதல், வெண்ணெய் மற்றும் தயிர்ப்பானைகளை உடைத்தல் முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர். கிருஷ்ணர்’ அவர்களுடைய குலத்தில் வளர்ந்தவர் என்பதால், யாதவர்களை மற்ற சமூகத்தார் அன்பு பாராட்டி நடத்துவதாகக் கூறப்படுகிறது. முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள். தென்மாவட்டங்களில் இன்றைக்கும் யாதவர் இனமக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இரவு நேரங்களில் விளைச்சல் நிலங்களில் ஆடுகளை நிறுத்தி ‘கிடை’ போடும் வழக்கம் சிலரிடம் இன்றைக்கும் உண்டு. இதனால் நிலத்திற்கு மிகப்பெரிய சத்துக்களை வழங்குகிறார்கள். யாதவர்களில் சிலர் நிலச்சுவான்தார்களாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் எருதுகளை அடக்கி வீரத்தைக் காட்டிய்பின்பே, மணமகன் மணமகளை மணக்க முடியும் என்ற நிலை இருந்தது. இன்று அது வழக்கொழிந்து போய்விட்டது. முன்பு வயதுக்கு வந்த பெண்கள் பல்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சீக்கிரமே திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இப்போது அந்தக் கட்டுப்பாடு வேகமாக மறைந்து வருகிறது. சிலர் அக்காள் மகளைத் த்ருமணம் செய்கின்றனர். சில பகுதிகளில் வாழும் யாதவர்கள் அத்தை மகள், மாமன் மகளை மட்டுமே மணக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

மணமக்கள் கலந்து பழகுவதற்காகவும், மணமகளின் வெட்கத்தை மாற்றும் பொருட்டும் திருமணத்தின்போது சில கேலி விளையாட்டுகள் நிகழ்த்தப்படுகின்ரன. தன்ணீர் நிறைந்த பானையில் ஒரு த்ங்க மோதிரத்தைப் போட்டு, அதை மணமக்களை எடுக்கச் சொல்கிறார்கள். மணமக்கள் வீட்டிற்குள் நுழையும்போது மணமகனின் சகோதரி, அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘ஆண் குழந்தை வேண்டுமா, பெண்குழந்தை வேண்டுமா’ என்று கேட்கிறாள். அதற்கு பதில் சொன்னபிறகே வழி விடுகிறாள். இது போன்ற பல சடங்கு சம்பிரதாயங்கள் இன்று இவர்களிடையே வழக்கொழிந்து போய்விட்டன. தொழில் துறையில் ரோஜா தீப்பெட்டி அதிபர் கோபால் கிருஷ்ண யாதவர் பங்கு மகத்தானது. அதேபோல், மதுரை யாதவர் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்விப் பணிகளை இச்சமூகத்தினர் செய்து வருகின்றனர் என்றாலும், யாதவ சமுதாய மக்களில் பெரும்பாலானோர் இப்போதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். அவர்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். யாதவ நட்சத்திரங்கள் சிலர்: வீரன் அழகுமுத்துக்கோன்: 18-ஆம் நூற்றாண்டிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த வீரர். 37 ஊர்களுக்கு நடுநாயகமாக அமைந்திருந்த கட்டலங்குளத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர். வெள்ளையருக்கு கப்பம் கட்ட மாட்டோம் என்று முதன் முதலாக வீரமுழக்கமிட்டவர். கவியரசு வேகடாசலம் பிள்ளை: தமிழகத்தின் பெரும்புலவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் காவலராக இருந்து இவர் ஆற்றிய பெரும்பணி மறக்க முடியாதது.

மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை: இளைய தலைமுறையினரால் இலக்கணத் தாத்தா என்று அழைக்கப்பட்டவர். சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் இலக்கணங்களிலும் வித்தகராக விளங்கியவ்ர். கார்மேகக் கோனார்: மதுரை அமெரிக்கன் கல்லூரித் தலைமத் தமிழ்ப்பேராசிரியர். தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர். பதிப்புச் செம்மல். செந்நாப்புலவர். கோனார் நோட்ஸ் மூலம் தமிழ் மாணவர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். ம. ராதாகிருஷ்ணன்: சென்னை நகரத்தின் மேயராக இருந்து அரும்பணி ஆற்றிய அரசியல் அறிஞர்.

ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன்: காலத்தை வென்ற வரலாற்று பொக்கிஷங்களான செஞ்சிக்கோட்டையையும், கிருஷ்ணகிரி கோட்டையையும் கட்டிய ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன் என்ற சிற்றரசர்களைத் தந்து யாதவர் சமூகம் அரசர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. ஆனந்தரங்கம் பிள்ளை: 18-ஆம் நூற்றாண்டு தென்னிந்திய வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்தவர். பிரெஞ்சு ஆளுநரின் துபாஷியாக இருந்து அரசியல் சதுரங்கக்காய்களை நகர்த்தியவர். தமிழ், பிரெஞ்சு, தெலுங்கு, ஆங்கிலம், பெர்ஷியன் என்று பன்மொழிப் புலமை பெற்றிருந்தும், தமிழிலேயே ‘ரங்கப்பன்’ என கையெழுத்திட்டு தமிழ் உணர்வை வெளிப்படுத்தியவர். ஆளுநருக்கு இணையாக கையெழுத்து இடும்போதும் தமிழிலேயே கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. சட்டநாதக் கரையாளர்: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். சட்டநாதக் கமிஷனை அரசியல் வரலாறு மறக்காது. (அவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் கீழே பார்க்கலாம் நண்பர் நக்கீரன் பாண்டியன் தயவில்) தமிழ்க்குடிமகன்: திமுக ஆட்சியில் சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். மதுரை யாதவர் கல்லூரி முதல்வராக இருந்து கல்விப் பணியாற்றியவர். சிறந்த மேடைப்பேச்சாளர். கொங்கு மண்டல வரலாறு எழுதிய முத்துசாமிக் கோனார், அண்ணாவின் நண்பரும் குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் இருந்து ஏழைகளுக்கு உதவிய அரங்கண்ணல். ‘கோனார் உரை’யை உருவாக்கித் தந்து தமிழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வியில் பேருதவியாக இருந்த அய்யம்பெருமாள் கோனார். தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய முள்ளிக்குளம் ராமசாமிக் கோனார். கல்வித் தொண்டாற்றிய இராஜம்மாள் தேவதாஸ், கவிக்கொண்டல் கவிஞர் வாணிதாசன், பொதுத் தொண்டர் கா.வே. திருவேங்கடம் பிள்ளை, நகைச்சுவையாக இலக்கியம் படைக்கும் பேரா.தி.அ. சொக்கலிங்கம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சோ.ப., அதிமுக அமைச்சரவையில் இருந்த கண்ணப்பன், முன்னாள் இந்திய வங்கித் தலைவர் கோபாலகிருஷ்ணன் என்று எண்ணற்றவர்களித் தந்து பெருமை தேடிக் கொண்ட சமூகம் யாதவர் சமூகம். இந்த இடத்தில் டோண்டு ராகவன் ஒன்று கூற ஆசைப்படுவான். ஒவ்வொரு சாதியின் பாரம்பரியத்தையும் வெளிக்கொணர நிறைய உழைப்பு மற்றும் காலம் தேவைப்படும். அவ்வாறு செய்து முனைவர் பட்டங்கள் வாங்கியவர்களும் உள்ளனர். அவையெல்லாம் எனது சக்திக்கு அப்பாற்பட்டவை. ஆகவே அவன் பதிவுல நண்பர்களின் உதவியை தனது ஆனந்தரங்கப் பிள்ளை பற்றிய பதிவில் கோரியிருந்தான். முதலில் கரம் நீட்டியவர் நக்கீரன் பாண்டியன். அவர் கூறியவை கீழே. “தென்காசிக்கு பக்கத்தில் உள்ள அழகிய ஊர் செங்கோட்டை.முன்பு இது திருவதாங்கூர் சம்ஸ்தானத்தில் இருந்தது பின்னர் தேவி குளம் பீர்மேடு பரிவர்த்தனையில் தமிழகத்தோடு இணைந்தது. இங்கு தூத்துக்குடி-கொச்சின் பிரதானசாலையில் வீடுகள் எல்லாம் பிரமாண்டம்.இவையெல்லம் கரையாளர் வகுப்பை சேர்ந்தவ்ர்களின் சொத்து.பெரிய நிலச் சுவான்தார்கள்.இவர்கள் யதவ வகுப்பில் மேல்தட்டு மக்கள் எனச் சொல்லவார்கள். இந்த சமூகத்தில் சட்டநாதக் கரையாளர் பெரிய முக்கிய பிரமுகர்.இவர் பெயரில் ஒரு ஆண்கள் கல்லுரி 1968 களில் இங்குள்ள ஏழை மாணவ்ர்களின் கல்லுரிக் கனவை நனவாக்கியது.இவர் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.காங்கிரஸ் தியாகி. செங்கோட்டையில் கரையாளர் பூங்காவில் வாஞ்சிநாதனுக்குமணிமண்டபம் கட்ட பெருந்தலைவர் காமராஜர் முயற்சிகள் எடுத்தார்.

கரையாளரென்னுந் நாமத்தை ஆங்கிலேயத்தில் பாஷாந்தரஞ் செய்யுங்கால் Naval Forces என்ற அருத்தத்தைத் தரும். மஹா வித்துவான் சைமன் காசிச் செட்டி (Simon Cassie Chetty) அவர்களரங்கேற்றிய அரிய பிரபந்தத்தில், கரையாளர், சத்திரிய வருணத்தைச் சார்ந்தவர்கள்; நாடு நகர்களை யாண்டு பரிபாலனஞ் செய்தவர்களென அவர் கூறியிருக்கின்றனர். ஆனது பற்றி யிவர்கள் குருகுல வமிசத்தவர்கள். "கண்ணுடையரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்." தாஸ் பூஸ் தஞ்சாவூர் ஈஸ்பூ சென்று இதிகாசங்களைக் கற்றுணரா மாந்தரினிரு விழிகளிரு புண்களாம். இப் புண்களையுடையோர், குரங்குக்குந் தன்குட்டி பொன்குட்டி (The monkey praises its own tail) யென்றவாறாய் இதிகாசங்களை வேற்றுமைப் படுத்துவர். சம்பூரண கல்விக் கண்களையுடையோர், யாது மரபினராயினும் சத்தியந் தவறாதவர். இவ்வகுப்பினருள், தெல்லிப்பளை வாசியும் ஞானாந்த புராண ஆசிரியருமாகிய மஹா வித்துவான் தொன்பிலிப்பு அவர்களொருவர். யாழ்ப்பாணக் கௌரவ அல்லது கரையாளர் மரபுதித்த தொதியோகு முதலியாரைக் குறித்து, அவ்வித்துவான் வசனித்த குறிப்பு யாதெனில்:- "அல்லலுறு மஞ்ஞானத் திமிரந்தேய வருண்ஞான விசுவாச விளக்க முன்னூற், புல்லிய சொற் சிறிதெடுத்து விருத்தப் பாவாய் போர்ந்தவு ரோமாபுரியின் சங்கத்தேற, தொல்லுலகிலுயர்ந்தகுரு குலத்துமன்னன் தொன்தியோ கெனுமுதலி முயற்சியாலே, தெல்லிநகர் வேளாளன் தொம்பிலிப்புச் செந்தமிழிற் காப்பியமாய்ச் செய்தான் மன்னோ."

Image Gallery

Services Overview

ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு (ம) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் நம் இன மாணக்கர்களை ஊக்குவித்து பாராட்டி பரிசிகளும், ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வரப்படுகிறது..

Contact Us

அறக்கட்டளைக்கு வளர்ச்சி நிதி வழங்க விரும்புபவர்கள் THANJAVUR YADAVA CEC TRUST என்ற பெயருக்கு அனுப்பி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Address:1300,காந்திஜி நகர் - நாஞ்சிக்கோட்டை சாலை ,தஞ்சாவூர்
Telephone:99424 56193
fax:
E-mail: sayadav63@gmail.com